
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்க பெரியார் கொள்கை வரும்போது நாங்களும் இறை மறுப்பு , கடவுள் மறுப்பு எல்லாம் பேசின ஆட்கள் தான். இப்ப நீங்க மதச்சார்பற்ற அணி எனசொல்றீங்க…. மதச்சார்பற்ற கொள்கையின்னு சொல்றீங்க…. திடீர்னு 90 விழுக்காடு எங்க கட்சியில இந்துக்கள் என்று சொல்றீங்க…. நான் வேல் எடுக்கும் போது என்னை காரி உமிழ்ந்தீங்க. உங்க முரசொலியில் அவ்வளவு இழிவா எழுதுனீங்க.
சிவபெருமான்னு ஒருத்தர் வச்சிக்கிட்டு அவ்வளவு இழிவா நீங்கள் பேசுனீங்க . இப்ப நீங்க தூக்குனீங்க வேல். பிஜேபி தூக்குனதும் நீங்க தூக்குனீங்க… நீங்க செஞ்சா எல்லாம் சரி. இப்ப திடீர்னு சாதி வாரி கணக்கெடுப்பு எடுன்னு சொல்றீங்க. நேத்துதான் கட்சி ஆரம்பிச்சு ஆட்சிக்கு வந்திருக்கீங்களா…? ஒரு ஊடகவியலாளரா நீங்களே கேளுங்க… நான் பேசுறேன் அப்படின்னா…
நான் அதிகாரத்துக்கு வரல, நான் பேசுறேன். எங்க தாத்தா ஆனைமுத்து ஐயா பேசினார். அப்புறம் எங்க அப்பா ராமதாஸ் பேசினார். அதுக்கு பிறகு அவருடைய பிள்ளைகள் நாங்க பேசுறோம். நீங்க எங்க பேசுனீங்க ? அதிகாரத்தில் இருக்கிற நீங்க எடுக்க முடியாதா ? பிரதமருக்கு கடிதம் எழுதிட்டு இருக்கீங்க… நிதீஷ்குமார் பிரதமருக்கு கடிதம் எழுதி தான் எடுத்தாரா ?
பீகாரில் நிதீஷ்குமார் குடிவாரி கணக்கெடுப்பை பிரதமருக்கு கடிதம் எழுதி தான் எடுத்தாரா ? அவங்க எடுக்க மாட்டாங்கன்னு தெரியுது… எடுக்க மாட்டாங்க அவங்க.. எடுத்தா அவங்க எண்ணிக்கை தெரிஞ்சுரும்… திமுக எடுக்காது. எடுத்து அவங்க எண்ணிக்கை… யாரு தமிழர் ? யாரு தமிழர் அல்லாதார் ? இந்த மண்ணில் தமிழர்களுக்கான இடம் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். அதனால தான் நீங்க எடுக்கல, வேற ஏதாவது காரணம் இருக்கா ? சொல்லுங்க… அதனால தான் நீங்க எடுக்கல என தெரிவித்தார்.