
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிற நடிகர் விஜய் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். ஏனென்றால் இந்த நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கிறது. எல்லோருக்கும் அரசியல் கட்சி துவங்குகின்ற போது, மக்களுக்கு பணி செய்வது என்பது தான் அவர்கள் கூறுகின்றது பழக்கம். அதனால் அவரும் மக்களுடைய பணி செய்வதற்காக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து, களத்திற்கு வருகிறார், வரட்டும்.
அதனால நீங்க ஒன்னு சொன்னீங்க… ”பிறப்புக்கும் எல்லா உயிருக்கும்” உண்மை. இந்த நாட்டில் தான் மனித உயிர்கள் மட்டுமல்ல, ஒரு தாவர உயிர்களுக்கு… தாவரத்துக்கு கூட உயிர் இருக்குன்னு சொல்லக்கூடிய நாடு… பல்வேறு விலங்கினங்களை ஒரு குடும்ப உறுப்பினராக பார்க்கின்ற பார்வை இந்த நாட்டினுடைய பாரம்பரியத்துக்கு சொந்தமானது… இங்கு முன்னாள் பேசியவர்கள் சொன்னார்கள்…
நம்முடைய எம்பி அவர்கள்… அதாவது பாரதிய ஜனதா கட்சி மக்களை ஒன்றிணைக்கிறது. நார்திலிருந்து வர்ற நான், இங்க சவுத்ல உட்கார்ந்து எல்லா தொண்டர்களோடும் வேலை செய்வதற்கான வாய்ப்பை எங்க கட்சி கொடுக்கின்றது . நார்த், சவுத் என எந்த டிவிஷனும் எங்களுக்கு இல்ல… ஈஸ்ட், வெஸ்ட்ன்னு எங்களுக்கு டிவிஷன் இல்லை. இந்த பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் இருக்கின்ற மக்களை ஒருங்கிணைக்கின்ற கட்சியாக இருக்கிறது. அதனால நாங்கள் பணி செய்வதையே நாட்டு மக்களை ஒருங்கிணைப்பதற்காகத்தான், வேறுபாடுகளை கலைவதற்காக தான் எங்களுடைய கட்சி நடத்துகின்றோம் என தெரிவித்தார்.