
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரியங்கா காந்தி அவர்கள், சோனியா காந்தி அவர்கள் தமிழகத்துக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி நிறைய மீட்டிங் எல்லாம் போட்டு பேசி இருகாங்க. அதுல எல்லோருமே இன்னைக்கு காங்கிரஸ் கட்சி வளர்ப்பதை விட அம்மையார் சோனியா காந்தி அவர்களும், பிரியங்கா காந்தி அவர்களும் திமுகவை வளர்பதில் குறியா இருக்காங்க.
அதனால் இதை பற்றி கருத்து சொல்லுவதை விட அந்த மாநாடே ட்ராமா தான். எப்ப இதற்கு முன்பு கனிமொழி அவர்கள் 31.2.2022 சென்னையில ஒரு மகளிர் மாநாடு நடத்துனாங்க. அன்னைக்கு நம்முடைய மகளிர் கான்ஸ்டபிள் ஒருத்தங்க கிட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மிஸ் பிகேவ் பண்ணாங்க. அந்தவழக்கு விசாரணை நடந்துச்சி. அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு திமுகவினுடைய பகுதி கழக செயலாளர் போயி, போலீஸ் ஸ்டேஷன்ல இருக்குற இந்த லேடி கான்ஸ்டபிளை அங்கேயே மிரட்டிட்டு,
சாட்சி கொடுக்க கூடாது என்று சொல்லி விட்டு, அதன் பிறகு திமுகவினுடைய MLA அந்த இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணி, அந்த அம்மாட்ட சமாதானமாக போக சொல்லுங்க அப்படினு சொன்ன இவர்கள் மகளிரை காக்கின்ற லட்சணம். போலீஸ் ஸ்டேஷன்ல புகுந்து, பெண் கான்ஸ்டபிளை மிரட்டுறாங்க சாட்சி குடுக்காதிங்கனு சொல்லிட்டு, மகளிர் மாநாடு போட்டு மகளிருக்காக திமுக இருக்கு சொல்லுறாங்க.. இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நகைச்சுவையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நிச்சயமாக வருகின்ற காலத்துல அவர்களுக்கு தெரியும் மகளிர் சார்பாக எந்த கட்சி இருக்குது ? எந்த பக்கம் பிரதமர் இருக்கின்றார்? அவர்களுக்கு உண்மையாலுமே அரசியல் அதிகாரம் கொடுக்கணும். ஏன்னா மகளிர் அரசியலுக்கு வரும் பொழுது ஒரு கருணை வரும். இன்னுமே ஒரு பிரச்சனையை நுணுக்கமாக ஆராய கூடிய தன்மை மகளிர் கிட்ட இருக்குது. அதனால உண்மையான பரஸ்ட் ஜெனெரேஷன் லேடி பொலிடிசின் வரவேண்டும் என்பதை பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது, நிச்சயமாக தமிழகத்துல அப்படிப்பட்ட காலம் வரும் என தெரிவித்தார்.