கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் படிக்கச் செல்லும் மாணவர்கள் தினமும் தனியார் பேருந்தை பயன்படுத்தி பள்ளிக்கு செல்கின்றனர். அதேபோன்று தனியார் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற மாணவர் ஒருவர் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனை போக்குவரத்து காவல்துறையினர் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவனின் தந்தை கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பசங்களா தயவு செஞ்சு பஸ்ல ஏறுனா படியில் நிக்காதீங்க, உள்ள போயிடுங்க. என் புள்ள போய்ட்டான்பா உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேக்குறேன் என்று மாணவர்கள் முன் கதறி அழுதார். உடனே அருகில் இருந்த காவல்துறையினர் அவரை தேற்றி ஆறுதல் கூறினர்.