பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி ஏற்றத்தாழ்வு அரசாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 உலகளாவிய ஊதிய அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவில் வருமானம் ஈட்டுவோர் கீழ்மட்டத்தில் இருக்கும்  10% மக்களை விட முதன்மையாக இருக்கும் 10 சதவீதத்தினர் 6.8 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றனர். இது நமது அண்டை நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் சமமற்றதாக உள்ளது.

இந்த புதிய எக்கனாமிக்ஸ் என்ற பெயருக்கு பதில் “மோடி பக்கோடா நாமிக்ஸ்” என பெயர் வைக்கலாம் என நேரடியாக தாக்கியுள்ளார். இதுவே நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வருமான சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு வழிவகிக்கிறது. மிகக் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்கள் கொண்ட நாடு பட்டியலில் இந்தியா உள்ளது என கூறினார். மேலும் ஜெயராம் ரமேஷ் நேரடியாக பிரதமர் உருவாக்கிய பக்கோடா நாமிக்ஸ் பலருக்கும் பக்கோடா, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு அல்வா..! என விமர்சித்துள்ளார்.