
கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரியும் பிராமணர்களை பலரும் இழிவுபடுத்துவதாக சென்னையில் பிராமணர்கள் போராட்டம் நடத்தினர். இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்றுள்ளார். இந்தப் போராட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி மக்களை ராஜாக்களுக்கு அந்தப்புரத்தில் வேலை செய்தவர்கள் என இழிவு படுத்தி பேசியதாக புகார்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நடிகை கஸ்தூரி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, நான் தெலுங்கு மொழியை மதிக்க கூடியவள். நான் கூறியதாக பரப்பப்படும் பொய் பிரச்சாரத்தை யாரும் நம்ப வேண்டாம்.
நான் தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசவில்லை. நான் இங்கு மொழி, இன வாதத்தை பற்றி கூறவில்லை. நான் தமிழர்களை தமிழர்கள் இல்லை எனக் கூறும் திராவிட மாடல் பேச்சாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்தேன். ஆனால் நான் கூறியதாக தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். நான் தெலுங்கு மொழியும், தெலுங்கு மக்களையும் பற்றி தவறாக கூறவில்லை என கூறினார். மேலும் பிராமணர்களுக்கு ஆதரவாக பல கேள்விகளையும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்டார்.