பொருளாதாரம் நெருக்கடி காரணமாக 20% ஊழியர்களை ஷேர் ஷர்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பெங்களூருவை தலைநகரமாகக் கொண்ட இந்திய சமூக ஊடக நிறுவனமான sharechat அதன் முதலீட்டாளர்களிடமிருந்து அழுத்தத்தை பெற்று வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் 20% ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது.

தற்போதைய உலக பொருளாதார சரிவு காரணமாக இந்த துரதிஷ்டவசமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக sharechat தலைமை நிர்வாகி அங்குஷ் சச்தேவா செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் செலவை குறைக்க முடியும் என நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..