நாட்டில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது 60 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதாவது அமெரிக்க நாட்டின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவர் ஒவ்வொரு நாடுகளின் மீதும் வரி விதித்து வருகிறார். அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதால் தான் தங்கம் விலை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள். இன்னும் தங்கம் விலை ஒரு கிராம் 10 ஆயிரம் ரூபாய் ஆகவும் ஒரு சவரன் 80 ஆயிரம் ரூபாயாகவும் உயரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்  கடந்த 35 நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 6040 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 7150 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 57 ஆயிரத்து 200 ரூபாயாகவும் இருந்த நிலையில், ஜனவரி 15ஆம் தேதி ஒரு கிராம் 7340 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 720 ரூபாய் ஆகவும் இருந்தது.

இதை தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதி ஒரு கிராம் 7730 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 63 ஆயிரத்து 840 ரூபாய் ஆகவும் உயர்ந்தது. பின்னர் நேற்று ஒரு கிராம் 7905 ரூபாயாகவும், ஒரு சவரன் 63 ஆயிரத்து 240 ரூபாய் ஆகவும் உயர்ந்தது. மேலும் இதன் மூலம் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரையில் கிராமுக்கு 755 ரூபாயும் சவரனுக்கு 6040 ரூபாயும் அதிகரித்துள்ளது.