
மத்திய அரசு எண்ணெய் இறக்குமதிக்கான வரியை 25% வரை உயர்த்தியுள்ள நிலையில் அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் குறைவு மற்றும் வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்டவைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி பாமாயில் எண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட நிலையில் 90 ரூபாயிலிருந்து 110 ரூபாயாக அதன் விலை அதிகரித்துள்ளது. இதேபோன்று சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவைகள் லிட்டருக்கு ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று கடலைப்பருப்பு விலை கிலோவுக்கு 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் துவரம் பருப்பு ஒரு கிலோ 10 ரூபாய் வரையிலும், உளுந்து மாற்றும் சிறு பருப்பின் விலை கிலோவுக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. மிளகு விலை கடந்த மாதத்தை காட்டிலும் தற்போது 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மேலும்எண்ணெய் பருப்பு உட்பட பிற மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.