கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியில் கேசரி வர்மன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கேசரி வர்மன் சிறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது அவருடைய   தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் ஆகியோர் தனிமையில் இருந்துள்ளனர்.

இதனையறிந்த 2 மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை கண்டதும் முனியன் மற்றும் பொன்னம்மாள் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக  அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். அப்போது மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் ஆயுதங்களால் தாக்கி விட்டு அறையின் பீரோவில் இருந்த 200 சவரன் நகைகளை திருடி சென்றனர்.

இது தொடர்பாக கேசரி வர்மன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 200 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.