
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) உடல்நல குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவுக்கு சமீபத்தில் சென்ற அவர் உயர், ரத்த அழுத்தம் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதையடுத்து டெல்லி வந்த அவர் சர் கங்கா ராம் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.