
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மற்றும் மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அண்ணாமலைக்கு மத்திய உளவுத்துறை அமைச்சகம் Z பிரிவு பாதுகாப்பு கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அண்ணாமலைக்கு இனி தினந்தோறும் 20-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அவருடைய வீடு மற்றும் அலுவலகம் போன்ற அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு 24 மணி நேரமும் கமாண்டோக்கள் அண்ணாமலைக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளனராம். மத்திய உள்துறை அமைச்சகம் மாவோயிஸ்டுகள் மற்றும் மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக கூறி பாதுகாப்பு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த பாதுகாப்புக்காக 2 நாட்களாக அண்ணாமலைக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தி பாதுகாப்பு வாங்குவதற்கு அவரிடம் கையெழுத்து வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.