
அரியலூரில் நாம் தமிழர் கட்சியின் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது, திமுகவும் பாஜகவும் வேறு வேறு கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தங்களது கட்சியில் 100 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர்.
இதே போல திமுகவில் 90 சதவீத இந்துக்கள் இருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறுவதால் இரண்டுக்கும் 10 சதவீதம் தான் வித்தியாசம். விஜய் தனது கட்சி மாநாட்டுக்கு என்னை அழைக்க மாட்டார். அவர் அழைக்கவும் கூடாது. அவரது கட்சி தொடக்க விழாவிற்கு மற்றவர்களையும் அழைக்க மாட்டார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் தேர்தலில் தனித்து நின்று போட்டியிடும் என நான் முடிவெடுத்து விட்டேன்.
ஆனால் கட்சி நிர்வாகிகள் தேர்தல் காலத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்து கூட்டணி பற்றி யோசிப்பேன். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 50 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டேன். ஆனால் செய்தியாளர்களிடம் இது குறித்து இதுவரை நான் தெரிவிக்கவில்லை என சீமான் பேசியுள்ளார்.