அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அமெரிக்காவிற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம்.

இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து அந்நாட்டு நீதிமன்றங்களே முடிவெடுக்கும். இதனை நாங்கள் பல சந்திப்பில் கூறியுள்ளோம். பாகிஸ்தான் அரசியல், அதிகாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அமெரிக்கா தலையிடுவதில்லை. அதனை அந்நாட்டு மக்களே முடிவு செய்து கொள்வர். இதற்கு அடுத்ததாக மில்லரிடம் பத்திரிக்கையாளர்கள் இம்ரான் கானை விடுதலை செய்ய கோரி போராட்டம் நடத்திய போது மக்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மில்லர் கூறியதாவது, போராட்டங்கள் அமைதியான முறையில் நடக்க வேண்டும். அடிப்படை மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும். அனைத்து நாடுகளைப் போலவும் பாகிஸ்தானுக்கும் தங்களது கருத்துக்களை முன் வைக்கும் உரிமை உள்ளது. அதேசமயம் மனித உரிமைகள், தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவைக்கு  மதிப்பளிக்க வேண்டும். எனவும் பாகிஸ்தானிடம் ஏற்கனவே அமெரிக்கா கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.