
நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் பல மடங்கு அதிகம். இந்த நிலையில் தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் sbi வங்கி பெயரிலான போலி செயலியை உண்மை என்று கூறி அதை பதிவிறக்கம் செய்தால் “SBI reward Points” பரிசு வழங்கப்படும் என்று மர்ம நபர்கள் செய்தி அனுப்புவதாகவும் இதை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்தால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவதாகவும் இரண்டு மாதங்களில் மட்டும் 73 புகார்கள் வந்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.