சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, 2011ல் மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்தார்கள். அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என தெரிவித்தார்கள்.

அதன்படி நாம் கொடுத்தோம்.  அதோடு நம்முடைய குழந்தைகள்.. அரசு பள்ளியில் படிக்கின்ற குழந்தைகள்… சிறப்பான கல்வி,  அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்து,

சுமார் 52 லட்சம் மடிக்கணினி வழங்கி அறிவுப்பூர்வமான மாணவர்களை தமிழகத்தில் உருவாக்கியது அண்ணா திமுக ஆட்சியிலே… அற்புதமான திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இன்றைக்கு விடியா திமுக அரசு….  இன்றைய முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார். அதை நம் மக்களிடத்திலே பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.