
உச்ச நீதிமன்றம் நாடே எதிர்பார்த்த முக்கிய விகாரத்தில் மிகவும் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. தன் பாலின ஈர்ப்போர் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்ற தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தன் பாலின சேர்க்கை குற்றமல்ல என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியிருந்தார்கள். சக பிரிவு 377 இதன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் நீட்சியாக தன் பாலின ஜோடிகளின் திருமணங்கள் அங்கீகரிக்கப்படுமா ? என்ற கேள்வியுடன் தான் உச்ச நீதிமன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனம் அமர்வு இது தொடர்பான வழக்கை விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்நிலையில் அந்த வழக்கில் தற்போது நான்கு தீர்ப்பாக வந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் அதில் இரண்டு தீர்ப்புகள் இதற்கு ஆதரவாகவும், மூன்று தீர்ப்புகள் எதிராக வந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் தன் பாலின ஜோடிகளின் திருமணத்திற்கான அங்கீகாரம் கிடையாது என் 3 தீர்ப்புகள் வந்துள்ளன.
திருமண தொடர்பான சட்டத்தினை ஏற்றி தன் பாலின ஜோடிகளின் திருமணங்களை அங்கீகரிக்கும் பொழுது அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். தற்போதைய சூழ்நிலையில் இதனை அங்கீகரிக்க முடியாது. ஏனென்றால் அங்கீகரிப்பதற்கான சட்டம் தற்போது வரை இல்லை. இல்லாத சட்டத்தை நாங்கள் உருவாக்க முடியாது. சட்டத்தை உருவாக்குவது என்பது நாடாளுமன்றத்தின் வேலை. அந்த வேலையை நீதிமன்றம் செய்ய இயலாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க இயலாது என்ற விஷயத்தை சொல்லி உள்ள அதே நேரத்தில் தன் பாலின ஜோடிகள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு… ரேஷன் அட்டை பெறுவது போன்ற அவர்களுக்கான பிரச்சனைகளுக்கான தேவை தொடர்பாக மத்திய கேபினட் செகரட்டரியேட் என்று சொல்லக்கூடிய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்ட வேண்டும் எனவும்,
அவர்களுடைய கோரிக்கைகள், தேவைகள் என்பது பரிசீலிக்க வேண்டும். நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விஷயங்கள் எல்லாம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தன் பாலின ஈர்ப்பு குற்றச்செயல் கிடையாது. யார் வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் அவர்களது வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள இந்திய அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியது என நீதிபதி தெரிவித்தார்.