மக்கள் கட்சி தலைவராக இருப்பவர் அர்ஜுன் சம்பத். இவர் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பாடகி இசைவாணி சபரிமலை ஐயப்ப சுவாமியை பற்றி  அவதூறாக பாடியுள்ளார். இது பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. அதனால் அவரது பாடலை தமிழக அரசு தடை செய்வதோடு, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மெக்கா, மதீனா, ஜெருசேலம் போன்ற பகுதிகளுக்கு பயண நிதி வழங்கப்படுகிறது.

அதே போன்று சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கும் பயண நிதி வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி கோவிலுக்கு அருகாமையில், தமிழ்நாடு பவனம் கட்டி, அதில் தமிழக பக்தர்கள் சென்று தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக கட்சியின் தலைவரான விஜய் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் மக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டனர், ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். அதன் பின்பு அவர்கள் டாக்டருக்கு படிக்கின்றனர் என்று கூறினார்.