
ரஷ்ய நாட்டின் ராணுவ மந்திரியாக செர்ஜி ஷொய்க்கு செயல்பட்டு வருகிறார். உக்ரைனுக்கு எதிராக நடைபெற்ற போரில் இவருக்கு உதவியாக இருந்தவர் தைமூர் இவானாவ். இவர் ரஷ்ய நாட்டின் துணை பாதுகாப்பு துறை மந்திரி ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் ராணுவத்திற்கு செலவு செய்யப்பட்ட பணத்தை தைமூர் இவானாவ் பதுக்கி உள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளது.
அதன்படி தைமூர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதான வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தைமூர் இவானாவ் போரின் போது ரூ. 427 கோடி பணத்தை முறைகேடு செய்துள்ளதாக தெரிய வந்தது. மேலும் ஊழல் செய்த குற்றத்திற்காக அவருக்கு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.