செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பிஜேபி  வந்தவுடன் 2014இல் நீட் தேர்வை முழுமையாக கொண்டு வந்தார்கள். கொண்டு வந்த போது அவர்கள் சொன்ன காரணம்… மருத்துவத்துறையில் நல்ல தகுதியான மருத்துவர்களை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் நீட் தேர்வு கொண்டு வருகின்றோம். அது மட்டும் இல்ல,  மருத்துவ கல்வியை வணிகமயமாக்குதல் கூடாது என்று சொல்லி… இந்த இரண்டு காரணங்களை சொன்னது அரசு. ஆனால் இப்போ அந்த இரண்டு காரணங்களும் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் நீங்கள் பார்த்திருப்பீங்க…  ஆல் இந்தியா PG நுழைவு தேர்வு தகுதி மார்க் 0  ( ஜீரோ ) உலகத்துல இப்படி எங்கேயுமே இருக்காது. தமிழ்நாட்டில நுழைவுத் தேர்வு இல்லாத காலத்தில் 12ஆவது  தேர்வு தகுதி மதிப்பெண்களில் 99 மதிப்பெண்கள் எடுத்தால் தான் ஒரு மருத்துவராக தேர்வாக முடியும்.  மருத்துவ PG பட்டப்படிப்பில்  பார்த்தீங்கன்னா….  95 மதிப்பெண்கள் வாங்கணும்.

இப்படி எல்லாம் இருந்த காலம்.  இப்ப பார்த்தீங்கன்னா….  95 மதிப்பெண்கள் வாங்கி  ஒரு  மெடிக்கல் PG-க்கு  தேர்வான  காலத்துல இன்னைக்கு 0 ( ஜீரோ)  மதிப்பெண்கள். இப்படி ஒரு தேர்வு தேவையா ? அப்போ என்ன தகுதியில் மருத்துவர்களை அங்கு தேர்வு செய்றிங்க.  இது மட்டுமல்ல…  எம்.பி.பி.எஸ்யும்  இப்படித்தான். அன்னிக்கு மாலையில்  கூட சொல்லிட்டு இருந்தேன்  வசதியா இருக்கின்றவர்கள் தான் இன்னைக்கு மருத்துவ படிப்பு படிக்க முடியும்.  ஏழை – கிராமப்புற மாணவர்கள் எல்லாம் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு சூழல் கிடையாது.

பல உதாரணங்கள் இருக்குது…  54௦ மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவன். கிராமத்தில் இருக்கின்ற மாணவன். ஒரு விவசாய மகன்…  எம்.பி.பிஎஸ் கிடைத்தும் படிக்க முடியவில்லை. காரணம் அவனால ஐந்து லட்ச ரூபாய் கட்டணம் கட்ட முடியவில்லை. 5 லட்ச ரூபாய் கவர்மெண்ட் கோட்டா பிரைவேட் காலேஜ்ல….  அது 120 மதிப்பெண்கள் 720க்கு 120 மதிப்பெண்கள் பெற்ற கோடீஸ்வரன் மகன் இன்னைக்கு மருத்துவம் படிச்சுக்கிட்டு இருக்கான்.

காரணம்…  அவங்க அப்பாவால் 30 லட்சம் ரூபாய் ஒரு வருஷத்துக்கு கட்டணம் கட்ட முடியுது. அது மட்டும் இல்ல,  மருத்துவம் கட்டணம் பார்த்தீங்கன்னா…  4 லட்சம்… 3  லட்சம் இருந்தது… இப்போது 30 லட்சம் ஆயிடுச்சு. அது மட்டும் இல்லாம…  நீட் பயிற்சி க்காக ஒவ்வொரு வருஷமும் ஒரு லட்சம் கோடி 1.50 லட்சம் கோடி இந்தியா முழுவதும் வணிகம் செஞ்சுகிட்டு இருக்காங்க,  பிசினஸ்…  நீட் கோச்சிங் சென்டர் என பெயர்  வச்சுக்கிட்டு லட்சக்கணக்கான கோடியை கொள்ளை அடிச்சிட்டு இருகாங்க ஆக நீட் தேர்வு தேவை இல்லை என தெரிவித்தார்.