
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு ஹாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல விருதுகளை தற்போது குவித்து வருகிறது. அந்த வகையில் படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்த நிலையில், ஆஸ்கர் விருதுகளின் இறுதி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் க்ரிடிக் விருது வழங்கும் விழாவில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர் ராம்சரண், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோருக்கு ஹாலிவுட் க்ரிடிக் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடித்த ஜூனியர் என்டிஆரு =க்கு விருது வழங்காததால் அவருடைய ரசிகர்கள் கொந்தளித்ததோடு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதற்கு விருது வழங்கிய அமைப்பு விளக்கம் கொடுத்திருந்தது. அதாவது படப்பிடிப்பு மற்றும் சகோதரரின் மறைவு போன்ற காரணங்களால் ஜூனியர் என்டிஆரால் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
அவருக்கு மற்றொரு நாளில் விருது கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஹீரோயின் ஆக நடித்திருந்த ஆலியா பட் ஆகியோருக்கு ஹாலிவுட் க்ரிடிக் விருதுகள் அனுப்பப்பட இருக்கிறது. அவர்களுக்கு வழங்க வேண்டிய விருதுகளின் புகைப்படத்தை அந்த அமைப்பு தங்களுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு தகவலை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதனால் தற்போது ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
