ஏப்ரல் 30 ரோஹித் சர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் ஒருவர் 6 அடி உயர கட்அவுட்டை உருவாக்கியுள்ளார்.  இந்த கட்அவுட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனுமான ரோஹித் ஷர்மா, ஏப்ரல் 30 ஆம் தேதி 36 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். ஏப்ரல் 30 ஆம் தேதி ரோஹித் சர்மாவின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள ரோஹித் சர்மா ரசிகர் ஒருவர் 6 அடி உயர கட்அவுட்டை உருவாக்கியுள்ளார்.

ரோஹித் சர்மா ரசிகர் 60 அடி கட் அவுட்..

ஹைதராபாத்தில் வசிக்கும் ரோஹித் சர்மா ரசிகர் ஒருவர் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரின் 60 அடி உயர கட்அவுட்டை உருவாக்கியுள்ளார். இருப்பினும், இந்த கட்அவுட் ரோஹித் சர்மாவின் பிறந்தநாளான ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடப்படும். வரலாற்றில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இவ்வளவு பெரிய கட்அவுட் வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ரோஹித் ஷர்மாவின் 60 அடி நீள கட்-அவுட், இதுவரை கிரிக்கெட் வீரரின் மிக நீளமான கட்-அவுட் ஆனது. இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்  தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த கட் அவுட் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2023 சீசனில் ரோஹித் சர்மாவின் மும்பை அணியின் ஆட்டம் :

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. இந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றியும், 4 தோல்வியும் கண்டுள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.