இந்திய கேப்டனான ரோகித் சர்மா தற்போது ஜம்மு, காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணியில்  ரஞ்சி டிராபியில் விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு 15 வயது இளம் ரசிகர் ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதனை அந்த இளம் ரசிகர் தனது சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். இந்த கடிதத்தில், என்னுடைய முன்னுதாரணமான வீரர், எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களின் முதன்மையானவர் ரோகித் சர்மா. வெறுப்பவர்கள் வெறுப்பார்கள், ஆனால் உங்களது தலைமை எப்பொழுதுமே உயர்நிலையில் உள்ளது.

நீங்கள் களத்தில் சிறந்த வீரராகவும், ஒவ்வொரு சமயத்திலும் விளையாட்டில் சிறந்த கேப்டனாக வெற்றி பெற்று உள்ளீர்கள். நான் உங்களை பின் தொடர்ந்து என்றென்றும் வருவேன். எனக்கு 15 வயது நான் விளையாட்டு ஆய்வாளராக வேண்டும் என்பதே என்னுடைய கனவு லட்சியம். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் இணைந்து இன்டர்ன்ஷிப்பை முடித்துள்ளேன். எனக்கு நீங்கள் ஏதாவது உதவ நினைத்தால், தயவுசெய்து ஓய்வு அறிவிக்க வேண்டாம்.

நான் கிரிக்கெட்டை தனது லட்சியமாக கொண்டு உள்ளதற்கு காரணமே நீங்கள்தான். உங்களை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் மிக விரைவில் உங்களது திறமைக்கு மீண்டும் திரும்புவீர்கள். ரஞ்சி டிராபியில் நீங்கள் அடித்த சிக்ஸர்கள் என்றும் மறக்க முடியாதவை. உங்களது ஆட்டத்தைக் காண ஒவ்வொரு முறையும் ஆவலோடு காத்திருக்கிறேன்.எனது கடிதத்தை நிச்சயமாக படிக்கவும். என யாத்தார்ட் என்ற 15 வயது ரசிகர் தனது சமூக வலைதள பக்கத்தில் ரோகித் சர்மாவுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.