
பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2024 ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் நாடுகள் அரிசியின் தரம் சரிவர இல்லாததால் ஏற்றுமதியை நிறுத்தியது. அதாவது அரிசியில் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியதோடு நாட்டின் பொருளாதாரம் அதனால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். பாகிஸ்தானில் தேசிய பேரவை கூட்டத்தின் போது இந்த தர கட்டுப்பாட்டு குறைபாடுகள் பற்றி பேசப்பட்டது. அப்போது பேசிய அந்த கூட்டத்தின் தலைவர் முகம்மது ஜாவேத் ஹனிஃப்கான் அரிசியில் தரநிலை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததோடு அரிசி சுத்திகரிக்கும் முறைகளில் நிலவும் ஆதிக்க முறைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி 14.50 % வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக டாலர் $1.87 பில்லியன் வருவாயை பெற்றது. குறிப்பாக பாஸ்மதி அரிசியின் உற்பத்தி 30.62 % அதிகரித்து $443.82 மில்லியனாக உயர்ந்துள்ளது.ஆனால் அங்கு வாழும் உள்ளூர் மக்களுக்கு ஒரு கிலோ பாஸ்மதி விலை $ 0.54-லிருந்து $ 1.43 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையுயர்வு சாதாரண குடும்ப மக்களுக்கு வாழ்க்கையை பாதிப்பது மட்டுமல்லாமல் அவர்களது செலவுகளை அதிகரிக்க செய்யும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.