
இங்கிலாந்து நாட்டில் ராய்ட்டர்ஸ் என்ற பிரபலமான சர்வதேச செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நம்பகமான செய்திகளை தருவதில் முன்னணி இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், முதலீடு உள்ளிட பல துறைகளில் விரிவான செய்திகளை வழங்குகிறது. இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த அதன் எக்ஸ் வலைதள கணக்கு திடீரென முடங்கியதாக கூறப்படுகிறது.
அதனால் அதனை பயன்படுத்தி வரும் பயனர்கள் செய்திகளை படிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டபோது, தங்களுக்கும் அந்த செய்தி நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறியது. பின்னர் மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் வலைதள கணக்கை தடை செய்ய வேண்டும் என்று எங்கள் தரப்பில் எந்த கோரிக்கையும் அளிக்கப்படவில்லை. தற்போது முடக்கத்தை சரி செய்ததற்கான பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தடை நீக்கப்படும்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பல்வேறு வலைதள பக்கங்கள் முடக்கப்பட்ட நிலையில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் வலைதள பக்கம் முடக்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு எக்ஸ் நிறுவனத்திடம் முடக்கத்திற்கு விளக்கம் அளிக்கவும், தடையை நீக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் ராய்ட்டர்ஸ் நிறுவன எக்ஸ் தளத்திற்கு கோர்ட் உத்தரவு அல்லது உள்ளூர் சட்டங்களின் கீழ் இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் ராய்ட்டர்ஸ் பேக்சாட், ராய்ட்டர்ஸ் டெக் நியூஸ், ராய்ட்டர்ஸ் ஆசியா போன்ற கணக்குகள் இந்தியாவில் செயல்பட்டு வந்தது. தற்போது 24 மணி நேரமாக முடக்கத்தில் இருந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு நேற்று சரி செய்யப்பட்டது. அதன் பின் செய்திகள் வெளிவர தொடங்கின. மேலும் இந்தியாவில் டிஆர்டி வேர்ல்டு என்ற துருக்கி ஊடகம், குளோபல் டைம்ஸ் என்ற சீனாவின் ஆங்கில நாளிதழ் மற்றும் போன்ற எக்ஸ் வலைதள கணக்குகளும் சரி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.