
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா.. பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தின வீடியோவா வந்திருக்கிற நிலையில, உரிய தண்டனை.. தூக்கு தண்டனை கொடுக்கணும்.
இதை உறுதிப்படுத்தனும் என்கிறது தான் எங்கள் நிலை. அந்த நிலையை மோடி சொல்லி இருக்காரு, சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று… அதுல எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது. கச்சத்தீவு எல்லாம் சொல்லி இருக்காரு. மீனவர்கள் எவ்வளவு பேர் இப்ப சிரமப்பட்டுட்டு இருக்காங்க. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி எல்லாம் நிறைவேத்திட்டாங்களா..?
இன்னைக்கு பாத்தீங்கன்னா… அந்த அளவுக்கு மீனவர்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருக்காங்க.மீனவர்கள் அல்லாதவர்கள் எல்லாம் ஒன்னு கூடி இன்னைக்கு மீனவர்கள் மாநாடு ஸ்டாலின் நடத்த போறாரு. அங்கு உள்ள மீனவர்கள் எல்லாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மீனவர்கள் அல்லாமல் சமூக விரோதிகளை கொண்டு மாநாடு நடத்துவதா ?
அமளி நகர் மீனவர்கள் இன்னிக்கும் கடலுக்கு போகாமல் போராடிட்டு இருக்காங்க. அதெல்லாம் இவர் கண்ணுக்கு தெரியலை. உள்ளங்கை நெல்லிக்கனி போல அவ்வளவு பிரச்சனை தமிழ்நாட்டில் இருக்கு. எத பத்தியும் கவலை இல்லை. எனக்கு வந்து பாத்தீங்கன்னா ரிமோட் தேவை. டெய்லி ஃபங்ஷன், ஃபங்ஷன் என நடத்துறாரு. ஸ்டாலினுக்கு விழா நாயகன் என பெயர் வைக்கலாம். ரிமோட் நாயகன், சூட்டிங் அரசன் இது மாதிரி நிறைய பட்டம் கொடுக்கலாம். இது ஸ்டாலினுக்கு மேனியா. எப்ப பார்த்தாலும் ரிமோட்டை பிடிச்சிட்டு, விழாவிலேயே இருக்கணும். இப்படி தான் காலத்தை தள்ளுகின்றார் என தெரிவித்தார்.