கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் ரோட்ஸ் என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவிற்கு அருகே உள்ள கடற் பகுதியில் அகதிகள் சிலர் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ரோந்து படகு தங்களை நெருங்கி வருவதை அறிந்த இவர்கள், தப்பி செல்ல முயற்சிக்கும் போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் சென்றனர். அதன் பின் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு, 18 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போவதாக கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.