
இந்திய அணி விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாண்ட 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வரும் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றிக்காக தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவிற்கு இந்திய “ஏ” அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இங்கு இரண்டு முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது. தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியுடனும், இந்திய “ஏ” அணி மோத உள்ளது. போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய “ஏ” அணியின் வீரர்கள் லிஸ்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ள இந்திய “ஏ” அணியின் வீரர்கள் முறையே,
ருதுராஜ் கெய்க்வாட் -கேப்டன், அபிமன்யு ஈஸ்வரன் -துணை கேப்டன், சாய் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன்-கீப்பர், அபிஷேக் போரல்-கீப்பர், முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், டானுஷ் கோட்டியான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.