தமிழகத்தில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்த ராஜநாத் சிங் சென்னை விமானத்தில் இறங்கியவுடன்,  அங்கு தயார் நிலையில் இருந்த ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்தனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வு பணியானது நடைபெற்று வந்த நிலையில்,  ஆய்வு பணியை முடித்துக் கொண்டு தலைமைச் செயலகம் வந்த ராஜநாத் சிங்கை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வரவேற்று,  தற்போது  ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது.  இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன் இருக்கின்றனர்.

தற்பொழுது ராஜ்நாத் சிங்கிடம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்க கூடிய பாதிப்பு எந்த மாதிரியான பாதிப்பு ?   தற்போதைய நிலை என்ன ? இதை சரி செய்வதற்கு எது போன்ற உதவிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் ? உள்ளிட்டவை குறித்து ராஜ்நாத் சிங் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கேட்டு இருக்கிறார்.

ஏற்கனவே மத்திய அரசாங்கம் ஒரு 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,  5000 கோடி வேண்டுமென்று முதலமைச்சரும் கோரிக்கை விடுத்திருக்கிறார். எனவே கூடுதல் உதவியை மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங்கிடம் தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்பார் என தெரிகின்றது.