ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் “வேட்டையன்” லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் படத்தின் இயக்குநர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், துஷரா விஜயன், பஹத் பாசில், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் மாஸ் காட்சிகளை குறைத்து, கதைக்கேற்ற விதத்தில் தனது வேடத்தில் நடிக்கின்றார். இதுவரை ரஜினி இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பதால், அவரது ரசிகர்கள் இந்த படத்தை வித்தியாசமாக ரசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னைய படங்களில் தனது மார்க்கெட்டுக்கு ஏற்ற சம்பளத்தை மட்டுமே வாங்கியிருந்த ரஜினி, “அண்ணாத்த” படத்திற்கு 110 கோடி சம்பளமாக பெற்றார். ஆனால், அந்த படம் பெரும் லாபம் ஈட்டாத காரணமாக “ஜெயிலர்” படத்திற்கு 80 கோடியில் நடித்து, படத்தின் வெற்றிக்காக கலாநிதி மாறனிடமிருந்து கூடுதலாக 30 கோடி அன்பளிப்பு பெற்றார்.

“வேட்டையன்” படத்தின் சம்பளம் தொடர்பாக, ஆரம்பத்தில் 250 கோடிக்கு மேல் வாங்கியதாக சிலர் கூறினாலும், உண்மையில் அவர் 80 கோடியும் சில விநியோக உரிமைகளையும் மட்டுமே பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு மட்டுமே தனது முழு சம்பளத்தை வாங்குவது என்பதும் குறிப்பிடத்தக்கது.