
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஸ்ரீமன். மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் சென்னையில் அதிகமாக மழை பெய்து கொண்டிருக்கிறது மேலும் பல இடங்களில் ரெட் அலர்ட் அறிவித்த நிலையில் மழைநீர் ரோட்டில் தேங்கிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து கோடம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் ஸ்ரீமன் தனது வீட்டை காலி செய்து நுங்கம்பாக்கத்திற்கு மாறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளத்தில் மக்களை மீட்கும் பணியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார். தற்போது செய்யும் வேலையில் சிறிது வேகமாக செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இங்கு யாரையும் தப்பு சொல்ல முடியாது அரசு அவர்கள் வேலையை நன்றாக செய்து வருகிறது.
மேலும் சில இடங்களில் கால்வாய் பணிகளை சரி செய்தால் அடுத்த ஆண்டுகளுக்கு உபயோகமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.