
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள இருந்த நிலையில் தற்போது அந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஏப்ரல் 9-ம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை ராகுல் காந்தி திறந்து வைக்க இருக்கிறார்.
இதனால்தான் அன்றைய தினம் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து ஏப்ரல் 9-ம் தேதி கர்நாடகாவில் பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.