
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆவார். இவருக்கு 54 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ராகுல் காந்தியிடம் பொதுமக்கள் முதல் பலரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்கிறார்கள். குறிப்பாக சமீபத்தில் காஷ்மீருக்கு சென்றிருந்த ராகுல் காந்தியிடம் மாணவிகள் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் பல வருடங்களாக இந்த கேள்வியை நான் எதிர்கொள்கிறேன். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை தருவதாக இருக்கிறது என்றார். அதற்கு முன்னதாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டபோது உத்திரபிரதேச மாநிலத்தில் பொதுமக்களில் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டார்.
அதற்கு ராகுல் காந்தி விரைவில் நடக்கும் என்று கூறினார். இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி பிரனதி ஷிண்டேவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் சிண்டேவின் மகள் பிரனதி ஷிண்டே. இவருக்கு 44 வயது ஆகிறது. இவர் சோலாப்பூர் தொகுதியின் எம்பி ஆவார். இவரும் ராகுல் காந்தியும் திருமணம் செய்து கொள்வதாக கூறப்படும் நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் ராகுலுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.