
விவசாயிகளுக்கு காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது..
2024மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
- விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும்.
- விவசாயிகளின் கடன் தள்ளுபடி அளவை நிர்ணயம் செய்வதற்காக நிரந்தர விவசாய கடன் தள்ளுபடி ஆணையம் உருவாக்கப்படும்.
- பயிர் இழப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும்.
- விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி -இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும்.
- விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரிவிலக்கு அளிக்கப்படும்.
देश के सभी अन्नदाताओं को मेरा प्रणाम!
कांग्रेस आपके लिए 5 ऐसी गारंटियां लेकर आई है जो आपकी सभी समस्याओं को जड़ से खत्म कर देंगी।
1. MSP को स्वामीनाथन आयोग के फार्मूले के तहत कानूनी दर्ज़ा देने की गारंटी।
2. किसानों के ऋण माफ़ करने और ऋण माफ़ी की राशि निर्धारित करने के लिए एक… pic.twitter.com/sfIUcdeW6t
— Rahul Gandhi (@RahulGandhi) March 14, 2024