
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியுமே 5 நாட்கள் நடக்கவில்லை. அதற்கு விரைவாகவே முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி நடைபெற்றது இந்த டெஸ்ட் போட்டியும் 5 நாட்கள் நடக்கவில்லை.
இந்த முறை ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பழி தீர்த்தது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டும் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் இலங்கை- நியூசிலாந்து இடையேயான போட்டியில் இலங்கை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் இலங்கை அணி பைனலுக்கு தகுதி பெற்றுவிடும். மேலும் இந்தியாவின் வெற்றியை ஆஸ்திரேலியா தடுக்குமா.? இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா..? என்பது தான் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.