புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம், இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது. புஷ்பா படத்தின் முதல் பகுதி, வசூலில் சாதனை படைத்தது. இதனால் புஷ்பா 2 பற்றி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக தொடர்ந்தது. அந்நிலையில், படக்குழு புஷ்பா 2-ன் பாடல்கள் மற்றும் டீசரை வெளியிட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முதலில், இந்த படத்தை ஆகஸ்டு 15, 2024 அன்று வெளியிட முடிவு செய்திருந்தார்கள். ஆனால், இறுதிகட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால் , ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

புஷ்பா 2-ன் புதிய ரிலீஸ் தேதியைக் குறிப்பிட்டு, படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட உள்ளது. மேலும், ரசிகர்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க இன்னும் 75 நாட்கள் காத்திருக்க வேண்டியதாக உள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 பட குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.