
கோயம்புத்தூர் மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மாநகர பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைப்பை மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 30,000 மேற்பட்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கியுள்ளனர். இந்த ஆண்டுக்குள் மாநகரப் பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு மஞ்சப்பை வழங்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, கடந்த 3 மாதத்தில் மட்டும் நான்கு டன் பிளாஸ்டிக் பொருட்கள் செய்யப்பட்டு, 9 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக கடைகளுக்கு செல்லும் போது துணி பைகளை எடுத்து செல்ல வேண்டும். எனவே பொதுமக்களின் வசதிக்காக இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.