சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தாலுகா குழு உறுப்பினர் பாலு இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் தண்டியப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், தாலுகா குழு செயலாளர் ஆறுமுகம் பாலு, உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் வேணுகோபால், பட்டமங்கலம் கிளை செயலாளர் மாதவன், தாலுகா குழு உறுப்பினர்கள் சக்திவேல் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைக்குரிய நிதியை வழங்க வேண்டும். உணவு மானியத்திற்கான நிதி மற்றும் உர மானிய நிதியை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி உள்ளனர்.