
கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் இதன் காரணமாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள பிரியங்கா காந்தி அந்த வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து விவரம் வெளியாகி உள்ளது. அதில் அவர் கையில் 52 ஆயிரம் பணமும் கடந்த மாதத்தின் படி பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள வங்கியில் ரூ 2.5 லட்சம் பணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு டெல்லியில் உள்ள யுசிஓ வங்கியில் ரூபாய் 80,399 பணம் இருக்கிறது. கேரளாவில் உள்ள வங்கியில் சேமிப்பு பணமாக ரூபாய் 5,929 வைத்துள்ளார். அதாவது ரூபாய் 2.24 கோடியில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளார் அதோடு 1 கோடி மதிப்புள்ள தங்க நகையும் 59 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்களையும் வைத்துள்ளார்.
அவரிடம் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்து மொத்தம் 12 கோடி ரூபாய் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.