
கடந்த 2023 ம் ஆண்டு அமெரிக்கா அதிபராக இருந்தவர் ஜோ பைடன். அப்போது இவரது குடும்பத்தினருக்கு வெளிநாட்டு தலைவர்கள் பலர் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக வழங்கினர். அந்த பரிசுகளில் விலை உயர்ந்தது பிரதமர் மோடி கொடுத்த பரிசு தான் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை கூறியதாவது, ஜோபைடனின் மனைவிக்கு, அவர் 7.5 காரட் வைரம் கொடுத்துள்ளார். இதனுடைய மதிப்பு 17 லட்சம் ஆகும். இதுதான் அவர் பெற்ற பரிசுகளிலே விலை உயர்ந்தது என்று தெரியவந்துள்ளது.

உக்ரைன் தூதர் அளித்த ப்ரூச் எனப்படும் எந்த உடைகளிலும் அணிந்து கொள்ளும் 14,063 டாலர் மதிப்புள்ள நகை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இவர்களுக்கு, தனது அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடி இந்த பரிசை வழங்கியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு செதுக்கப்பட்ட சந்தனப் பெட்டி, சிலை, எண்ணெய் விளக்கு மற்றும் 6232 டாலர் மதிப்புள்ள ‘தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள் என்ற புத்தகத்தையும் பரிசாக வழங்கியுள்ளார். அந்நாட்டு அதிகாரிகளுக்கு சுமார் 35 ஆயிரம் டாலர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.