சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் கடந்த 15 வருடங்களாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிவேல். இவர் வழக்கம் போல இன்று ரெட்டிபட்டி பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது குப்பையில் ஒரு தங்க செயின் ஒன்று கிடைத்துள்ளது. உடனே மணிவேல் அதனை சூரமங்கலம் காவல் நிலையத்தில் நேர்மையாக கொண்டு ஒப்படைத்தார்.

இதனிடையே ரெட்டிபட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பொமிலா என்பவர் தனது 12 சவரன் தங்கச்செயின் காணாமல் போனது குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பின் அவரை அழைத்து அவரிடம் கூறிய விசாரணை நடத்திய பின் தங்க செயின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் காவல் நிலைய ஆய்வாளர் தூய்மை பணியாளரின் நேர்மையை பாராட்டி கௌரவித்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மணி வேலை பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.