அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தை கூடம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சந்தோஷி குழந்தை வேண்டாம் என நினைத்தார். ஆனால் டாக்டர்கள் கருவை கலைக்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலையில் இருந்த சந்தோஷி தனது வீட்டில் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சந்தோஷியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.