இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமானது ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலை ஏற்றத்தின் காரணமாகவே சேமிப்பு என்பது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். இருந்தாலும் மக்கள் தங்களால் முயன்ற அளவுக்கு ஒரு தொகையை சேமித்து வருகிறார்கள். இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது.

போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகிறது. போஸ்ட் ஆபீஸில் அமலில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 வரை PPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு மட்டுமே வட்டி கொடுக்கப்படுகிறது. எனவே முதலீடு செய்பவர்கள் ஐந்தாம் தேதிக்குள் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.