பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.