உத்திரபிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில் காசி ராம் கா பூர்வா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மங்கல் சரோஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக ட்ரீம் 11 ஃபாண்டாசி கிரிக்கெட் என்ற ஆப்பில் வெறும் ரூ.39 முதலீடு செய்து விளையாடி வந்தார்.

ஏப்ரல் 29ஆம் தேதி ட்ரீம் 11 ஆப்பில் விளையாடிக் கொண்டிருந்த அவர் 78 வது முயற்சியின் போது 4 கோடி ரூபாய் பரிசாக வென்றார். கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத அவரின் வெற்றி கிராமத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பலர் அவருடைய வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதோடு சிறிய முதலீட்டில் பெரிய வெற்றியை அடைந்த மங்கலின் தந்தை சுக்லால் சரோஜ் ஒரு விவசாயி ஆவார். அவர் தனது மகனின் வெற்றியை கண்டு பெருமிதத்தோடு பேசினார். அவர் “என்னுடைய மகன் இதனை சாதித்திருப்பார் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. 8 பேர் கொண்ட எங்கள் குடும்பத்திற்கு இது கடவுளின் அருள் போன்றது” என்று கூறினார்.

மேலும் இந்த இளைஞரின் வெற்றி ஏழை விவசாய குடும்பத்தை மாற்றி அமைத்ததோடு அப்பகுதி மக்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.