
தமிழக பாஜக சார்பில் நடைபெற்று வரும் எண் மண், எண் மக்கள் பாத யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, ஆடியோ, வீடியோ எல்லாம் கொண்டு வந்தேன், திமுக அரசை பற்றி பேச வேண்டும். திருநெல்வேலி மேயர் சரவணன் அவர்களுடைய 30 சதவீத கமிஷன் பற்றி பேச வேண்டும். அவர் மீது திருநெல்வேலியின் கவுன்சிலர் 41 பேர், அவர் மேயராக இருக்கக் கூடாது என்று… அவர் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை காண்பிக்க வேண்டும் என்று வந்தேன்.
ஆனால் உங்களுடைய அன்பை பார்த்து என்னால் வெறுப்பாக பேச முடியவில்லை. அதற்கான நேரம் இருக்கு.. அதற்காக நிறைய பேசுவோம். அதற்கான காலம் இருக்கிறது. இன்னும் நிறைய பேசப்போகிறோம். ஆனால் உங்களுடைய அன்பினால் நான் திக்கு முக்காடி இங்கு நின்று கொண்டிருக்கிறேன். அன்பை மட்டுமே திருநெல்வேலியில் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
யார் என்ன செய்தாலும் கூட அது உங்களுக்கு தெரிய போகிறது. உங்களுக்கு தெரியாமல் தமிழ்நாட்டில் எந்த தப்புமே நடக்காது. சில நேரத்தில் பொறுத்துக் கொள்கின்றீர்கள், சில நேரத்துல பாவம்னு விட்டு போறீங்க. சில நேரத்துல பொழைச்சு போ என விடுறீங்க… சில நேரத்துல ஓடிப்போயிருன்னு சொல்றீங்க… சில நேரத்துல ஓட்டு போடறேன், திரும்பி பார் இன்னொரு முறை மன்னிப்பு கொடுக்கிறேன்னு சொல்றீங்க… அதெல்லாம் உங்களுடைய அன்புல தான் என தெரிவித்தார்.