சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி கக்கன் காலணியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாயி(70) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 2 மர்ம நபர்கள் வெள்ளி, தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினார்கள். இதனையடுத்து எப்படியோ பேசி பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியின் 5 பவுன் நகையை அபேஸ் செய்துவிட்டு இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த குமார்(30), கிஷான்லால்(34) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.