கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அதிகாரிகள் செல்வ சித்ராவின் பையில் இருந்த கணக்கில் வராத 17,853 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
Related Posts
“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…
Read moreவிபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…
Read more