ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசீரனுர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சைக்கிளில் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவியை பெருமாள் கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பெருமாளை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் பெருமாளுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.