கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ் ஏட்டு சஜிகுமார் தனது வாகனத்தில் லாரியை துரத்தி சென்று செங்கவிளை நாற்கரை சாலை தொடக்கத்தில் வைத்து மடக்கி பிடித்தார். இதனையடுத்து போலீசார் சோதனை நடத்தியதில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரிக்கு போலீசார் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“2 மகன்களுக்கு இன்னும்….” அக்கம் பக்கத்தினரிடம் புலம்பிய மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி நாகம்மாள்(70). இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா உயிரிழந்தார். சமீப காலமாக தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை என…
Read more“தங்க புதையல் இருக்கு… பானையை மட்டும் திறக்காதீங்க”… ரூ.8 லட்சத்தை வாரி சுருட்டிய கும்பல்… பகீர் பின்னணி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் குள்ளப்பா- ராதம்மா(46) தம்பதியினர். இவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதியினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயிலை…
Read more